இதற்காக அஜீத், ஜிம்மே கதியாக கிடந்து இதுவரை 7 கிலோ எடை குறைத்துள்ளார். எல்லா ஹீரோக்களும் சிக்ஸ் பேக்ஸ் வைத்துதான் புஜபலத்தை காட்டியிருக்கிறார்கள். இப்போது அஜீத்தும் அதற்கு மாறுகிறார்.அதுவும் 8 பேக்ஸ் வைக்கிறாராம். படத்தின் கதை மிகவும் பிடித்து போனதால் தனது கால் ஆபரேஷனைக்கூட தள்ளி வைத்து விட்டு முழு மூச்சுடன் போலீஸ் பயிற்சி எடுத்து வருகிறார்.
பொருளாதார சிக்கலில் இருக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம், இயக்குனர் கவுதம் மேனன் இருவருக்கும் சேர்த்து அஜீத் ஜிம்மில் வியர்வை சிந்திக் கொண்டிருக்கிறார்.சூர்யாவுக்காக எழுதிய போலீஸ் கதையில் அஜீத்திற்காக சில மாற்றங்களை செய்துள்ளார் கவுதம் மேனன். இந்த மாதம் 15ந் தேதி படப்பிடிப்புகள் தொடங்குகிறது. தீபாவளி விருந்தாக படத்தை தரப்போகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி