ஆனால் தனக்கு கார் ஓட்ட தெரியாது என்று அப்பாவித்தனமாக கூறினார் சமந்தா. ஆனாலும் சில நிமிடமாவது கார் ஓட்டுங்கள் அதை வைத்து சமாளித்து விடுகிறேன் என்றார் இயக்குனர். ஆனால் பயத்தில் சமந்தா தயக்கம் காட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதை கவனித்த நாக சைதன்யா, சமந்தாவிடம் சென்று தான் கார் ஓட்டு கற்று தருவதாக கூறினார்.சமந்தாவும் சம்மதித்தார். சில மணி நேரம் சமந்தாவுக்கு அருகில் உட்கார்ந்து கார் ஓட்ட கற்றுத் தந்தார் நாக சைதன்யா. பயிற்சிக்கு பிறகு சமந்தா கார் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்டது.
இதுபற்றி சமந்தா கூறும்போது, கார் ஓட்டுவதென்றாலே எனக்கு கை நடுங்கும். ஏற்கனவே ஒருமுறை இதுபோல் காட்சியில் நடிக்க கேட்ட போது மறுத்துவிட்டேன்.அதிர்ஷ்டவசமாக நாக சைதன்யா எனக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்தார். ஒருவழியாக காட்சியில் நடித்து முடித்தேன். யார் மீதாவது இடித்து விடுவோமோ என்று பயந்துதான் ஓட்டினேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. காட்சி நன்றாகவே படமானது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி