தற்போது காளி என்ற படத்தை அறிமுக இயக்குனரான ரஞ்சித் இயக்கி வருகிறார். படம் துவங்கிய பின்பு இந்த காளி சென்ட்டிமென்ட் பற்றி கோடம்பாக்கம் பீதி கிளப்பியதால் இப்போது படத்திற்கு கபாலி என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள்.
சரி, இதில் கார்த்தியின் கேரக்டர் என்ன? அரசியல்வாதிகள் எலக்ஷன் நேரத்தில் சுவற்றில் சுண்ணாம்பு அடித்து ஓவியர்களை எழுத வைப்பார்களே, அப்படியொரு சுவர் ஒவியர்தானாம். இரு கட்சிகளுக்கு நடுவில் பிரச்சனையை கிளம்பிவிட்டு குளிர்காயும் காமெடியான பாத்திரம். யாரு அதிக பணம் தர்றாங்களோ, அவங்களுக்காக கைவசம் நிறைய ஐடியா இருக்கு என்று அறிவிக்கும் இவர், காசுக்கு ஏற்ப தனது ஐடியாக்களை வாரி வழங்குவாராம். அப்படி இவர் வழங்கிய ஐடியா எக்குத்தப்பாகி வெட்டு குத்து லெவலுக்கு போகுமாம்.
அதையெல்லாம் சமாளித்து இவரே எப்படி பெரிய இடத்தில் அமர்கிறார் என்பதுதான் கதை. பொதுவாகவே அரசியல் படங்கள் எடுத்தால் நாட்டு நடப்பை குத்திக்காட்டாமல் இருக்க முடியாது. ஆனால் ஆணானப்பட்ட விஜய்யே அலறிக் கொண்டிருக்கும் போது கார்த்தி என்ன செய்யப் போகிறாரோ என்று கவலையோடு அவரை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் இங்கே. கார்த்தியும், வசனங்களில் ரொம்ப காரம் வேண்டாம் என்று கூறி வருகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி