செய்திகள்,விளையாட்டு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு!…

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு!…

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு!… post thumbnail image
கேப்டவுன்:-தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் கிரேம் ஸ்மித், 33. இதுவரை 116 டெஸ்ட் (9257 ரன்கள்), 197 ஒருநாள் (6989 ரன்கள்) 33 ‘டுவென்டி–20’ (982 ரன்கள்) பங்கேற்றுள்ளார். தற்போது தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்க அணி கேப்டனாக உள்ளார். முதலிரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் சமநிலை வகிக்கிறது.

மூன்றாவது டெஸ்ட், கேப்டவுனில் நடக்கிறது. இதில் ஸ்மித் ‘பேட்டிங்கில்’ பெரிய அளவில் சோபிக்கவில்லை. இவர் இதுவரை இத்தொடரில் 5 இன்னிங்சில் விளையாடி மொத்தமாக 42 ரன்கள் (10, 4, 9, 14, 5) மட்டுமே எடுத்துள்ளார். இதையடுத்து மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்த பின், இப்போட்டிக்கு பின் எல்லா விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்மித் திடீரென தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கிரேம் ஸ்மித் கூறியது:
கடந்த ஆண்டு ஏப்., மாதம் ஏற்பட்ட கணுக்கால் காயத்திற்கு ஆபரேஷன் செய்தது முதலே, கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவது குறித்து யோசித்து வந்தேன். அதற்கு தற்போது தான் சரியான நேரமாக கருதுகிறேன்.தற்போது குடும்பத்தினருடன் நேரம் செலவிட திட்டமிட்டுள்ளேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின் எல்லாவிதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு என் வாழ்வில் வேறு எந்த முடிவு இவ்வளவு கடினமானதாக நான் கருதவில்லை.இத்தனை ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டது, ஒரு நம்பமுடியாத பயணமாகத்தான் கருதுகிறேன். தென் ஆப்ரிக்க அணிக்காக பங்கேற்றதை கவுரவமாக கருதுகிறேன். சில கடினமான தருணங்களில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி.இவ்வாறு கிரேம் ஸ்மித் கூறினார்.

ஸ்மித் ஓய்வு குறித்து கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவின் தலைமை நிர்வாகி லார்கட் கூறுகையில்,‘‘எல்லா விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஸ்மித்தின் அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியான விஷயமாக இருந்தாலும், அவருடைய முடிவுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அவரது சிறப்பான செயல்பாடு மற்றும் திறமையால் தென் ஆப்ரிக்க அணி, பல இலக்குகளை துரத்தில் வெற்றியை ருசித்துள்ளது,’’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி