அசாம்:-அசாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்காட்டில் ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்ணின் கணவரே அவரை எரித்து கொலை செய்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் சுயஉதவி குழுவினருடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது அங்கு குழுமியிருந்த பெண்களில் சிலர் ராகுலுக்கு முத்தம் தந்தனர். பெண்ணை கொன்ற கணவரும் தனக்குத் தானே தீ வைத்து கொண்டார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி