செய்திகள்,பொருளாதாரம் புனுகுப்பூனையின் கழிவில் இருந்து உருவாகும் காபியின் விலை ரூ.5000!…

புனுகுப்பூனையின் கழிவில் இருந்து உருவாகும் காபியின் விலை ரூ.5000!…

புனுகுப்பூனையின் கழிவில் இருந்து உருவாகும் காபியின் விலை ரூ.5000!… post thumbnail image
இந்தோனேஷியா:-உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது 5 ஆயிரம் ரூபாய்.அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து.

இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதுன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுக்கிறது. இந்த கொட்டைகளை சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இவ்வகை கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடையதாய் இருக்கிறதாம்.

அதனால் இந்தோனேஷியாவில், புனுகு பூனை கழிவு காபி கொட்டை ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. அதிக விலை கிடைப்பதால் தற்போது இந்த விற்பனையில் கலப்படம் மற்றும் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இதை தடுக்க, உண்மையான காபி கொட்டைகளை அறிவியல் முறைப்படி சோதனை செய்து கண்டு பிடித்து அங்கீகாரம் அளிக்க உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி