பின்னர் சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிப்பது குறித்து ஹன்சிகா அதிருப்தியில் இருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளை இருவரும் மறுத்துவந்தனர்.ஆனால் கடந்த சில வாரங்களாக சிம்புவும் ஹன்சிகாவும் பிரிந்துவிட்டார்கள் என்று கிசுகிசுக்கள் பரவிவந்தன. இதனையும் இருவரும் மறுத்ததோடு, கடந்த வாரத்தில் கூட சிம்பு ஹன்சிகா தனது காதலி என்றும், நயன்தாரா தோழி என்றும் கூறியிருந்தார்.இப்படிப் போய்க்கொண்டிருந்த இவர்களது காதலில் இடிவிழுந்ததைப் போல திடீரென்று கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஹன்சிகாவிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும், தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சிம்பு. இதன்மூலம் இத்தனை நாட்களாகப் பரவிவந்த வதந்திகள் உண்மையென்றானது.
ஒரு விசயம் முடிந்துவிட்டால் அதனை அப்படியே விட்டுவிடாமல் அதனைத் தோண்டித் துருவிப் பார்க்கும் இந்த வதந்தியாளர்கள் தற்பொழுது புது வதந்தி ஒன்றையும் பரப்பிவருகிறார்கள்.அது மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா இணைந்து நடித்ததால்தான் சிம்பு ஹன்சிகாவை விட்டுப் பிரிந்ததற்குக் காரணம் என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது எங்கே போய் முடியுமோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி