மற்றவர்கள் இந்த போனை பார்க்க மட்டுமே செய்யலாம். அதை மீறி, அதை இயக்க முயன்றால் உள்ளே இருக்கும் தகவல்கள் அனைத்தையும் இந்த போன், தானாகவே அரூ.த்துவிடும். இரட்டை சிம்முடன் இயங்கும் இந்த போனின் மற்றொரு சிறப்பம்சம், சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம், எல்டிஇ என்று 3 விதமான அலைவரிசைகளிலும் இயங்குவதுதான். இதனால் எந்த நேரத்திலும், சிக்னல் கிடைக்காமல்போக வாய்ப்பில்லை.
மேலும், இதை விரல்ரேகை பதியும் இயந்திரம் மற்றும் செயற்கைகோளுடன் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 3 ஆண்டு ஆராய்ச்சியில் உருவான இந்த செல்போனின் விலை விவரம், எப்போது பொதுமக்களுக்கு கிடைக்கும் போன்ற தகவல்களை போயிங் வெளியிடவில்லை. ரகசியங்களை காக்க விரும்பும் அரசு துறைகள், புலனாய்வு அமைப்புகள் மற்றும் பணக்காரர்களை குறி வைத்து போயிங் நிறுவனம் இந்த செல்போனை தயாரித்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி