அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சிறப்பு அந்தஸ்து பெற்ற 12-வது மாநிலம் சீமாந்திரா…

சிறப்பு அந்தஸ்து பெற்ற 12-வது மாநிலம் சீமாந்திரா…

சிறப்பு அந்தஸ்து பெற்ற 12-வது மாநிலம் சீமாந்திரா… post thumbnail image
திருமலை:-திருப்பதியில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:–இன்னும் மூன்று மாதத்தில் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும். அதற்கு தேவையான வேலைகளை அரசு அதிகாரிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதி தனி மாநிலமாக பிரிந்த பின்னர் ஏற்படும் சீமாந்திரா பகுதியை உள்ளடக்கிய ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இப்போது நாட்டில் 11 சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள் உள்ளன. எனவே, தெலுங்கானா பிரிந்த பின்னர் அமைய இருக்கும் ஆந்திர மாநிலம் 12–வது சிறப்பு அந்தஸ்து மாநிலமாக அமைய உள்ளது.சிறப்பு அந்தஸ்து நிலையை பெற இருப்பதால் ஆந்திர மாநிலத்துக்கு ஏராளமான அளவில் நன்மைகள் ஏற்பட உள்ளன. சாதாரண நிலையில் இருக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் 70 சதவிகிதம் மானியமாகவும் வழங்கப்படுகிறது.ஆனால் சிறப்பு அந்தஸ்து அடைய மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் 90 சதவிகிதம் மானியமாகவும், 10 சதவிகிதம் கடனாகவும் வழங்கப்படும். பாஜனதாவின் வற்புறுத்தல் காரணமாக சீமாந்திரா பகுதி மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. என அக்கட்சி கூறுவது பொய்.காங்கிரஸ். கட்சியைச் சேர்ந்த சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் சீமாந்திரா பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வாங்கி கொடுத்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஏற்பட்ட பின் 10 ஆண்டுகள் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஐதராபாத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றுபட்ட ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் கல்வி கற்க தடை இல்லை.
10 ஆண்டுகளுக்குள் சீமாந்திரா பகுதி மாநிலத்தில் டிரிபிள் ஐஐடி, பழங்குடியினர் பல்கலைகழகம், தேசிய பேரழிவு மேலாண்மை நிறுவனம், ஐஐடி, மருத்துவ கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை உட்பட அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி