இது சிம்பு, ஹன்சிகா காதலில் பிளவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதுவும் ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை. இருவரும் பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் திடீரென்று நயன்தாரா தோழிதான். ஹன்சிகாதான் என் காதலி என்று சிம்பு பேட்டி அளித்தார். இதையடுத்து மீண்டும் இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்றனர்.ஆனால் ஹன்சிகா இதனை மறுப்பதுபோல் நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று டுவிட்டரில் கூறினார். கடந்த 14–ந்தேதி காதலர் தினத்தில் இருவரும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.இந்நிலையில் இன்று நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
மேலும், ஹன்சிகாவுடனான காதலால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். ஆகையால், தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன். இதை ஆழ்ந்து யோசித்து முடிவு செய்துள்ளேன். இனிமேல், ஹன்சிகாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹன்சிகா எனது கடந்த காலம்.எந்த கட்டாயத்தினால் இந்த முடிவை எடுத்தேன் என்பதை இங்கே நான் கூறமுடியாது. இந்த அறிக்கையை என்னுடைய நண்பர்கள், நெருங்கியவர்கள், ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளேன். இப்போதைக்கு என்னுடைய நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த உள்ளேன். இந்த முடிவால் நான் மிகவும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி