செய்திகள்,திரையுலகம் ரஜினிக்காக காத்திருக்கும் டைரக்டர்!…

ரஜினிக்காக காத்திருக்கும் டைரக்டர்!…

ரஜினிக்காக காத்திருக்கும் டைரக்டர்!… post thumbnail image
சென்னை:-ரஜினியோ கோச்சடையான் ரிலீசுக்காக காத்திருக்கிறார். ஆனால் ஒரு புதுமுக டைரக்டரோ ரஜினியின் கடைக்கண் பார்வை தன் மீது படாதா? நாம் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கி விட மாட்டோமா? என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல, சேகர் கம்முலா தான். ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கஹானி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நீ எங்கே என் அன்பே’ படத்தின் டைரக்டர் தான் சேகர் கம்முலா. நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தை ‘அனாமிகா’ என்ற பெயரில் தெலுங்கிலும் டைரக்ட் செய்து வருகிறார்.விரைவில் ரிலீசாக இருக்கும் இந்தப்படம் சேகர் கம்முலாவுக்கு தமிழில் ஒரு நல்ல ஓப்பனிங்கை கொடுக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார். அதுமட்டுமல்ல அவர் தெலுங்கில் ‘லீடர்’ என்கிற மாஸ் ஹிட் கொடுத்தவர்.

அந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்தால் அதில் ரஜினி நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்கிற ஆசையில் அவரிடம் அந்தப்படத்தை பார்க்கச் சொல்லியிருக்கிறார்.ரஜினியை இயக்க வேண்டும் என்பது என் கனவு. ரஜினியின் பதிலுக்காகவே நான் மட்டுமல்ல என்னுடைய கதையும் கூட காத்திருக்கிறது. கண்டிப்பாக ரஜினி லீடர் படத்தை பார்த்தால் நடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டார். அந்தளவுக்கு அந்தப்படம் அவரை ஈர்க்கும் என்கிறார் சேகர் கம்முலா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி