வாலு படம் குறித்து இன்று பேட்டியளித்த அறிமுக இயக்குனர் விஜய் சந்தர், காதல், ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்து ஒருசேர அதே நேரத்தில் திகட்டாமல் கலந்து கொடுத்துள்ளோம் மொத்தத்தில் சொல்ல வேண்டுமானால் இது சிம்பு படமே அல்ல. ரஜினி படத்துக்குரிய எல்லா அம்சங்களும் வாலு படத்தில் இருப்பதால், இதை ரஜினி படம் என்றுதான் சொல்லவேண்டும் என்று கூறினார்.இந்த படத்தில் ஹன்சிகாவின் காட்சிகள் அனைத்து முடிக்கப்பட்டுவிட்டதால் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. இந்த பட புரமோஷனுக்கு தன்னை கூப்பிட வேண்டும் என்று இயக்குனரிடம் கறாராக கூறிவிட்டாராம் ஹன்சிகா.
நிக் ஆர்ட்ஸின் எஸ்.எஸ். சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்த படத்தின் இசையை எஸ்.தமன் அமைத்துள்ளார். வழக்கம் போல் சிம்பு படத்தில் நடிக்கும் சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோருகளுடன் ஜெய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி