இங்கிலாந்து நாட்டில் தேசிய வானியல் வாரம் ஆனது மார்ச் 1ந்தேதியில் இருந்து 8ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. எனவே, நாடு முழுவதும் வியாழன் கிரகத்தினை பார்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளன.இது குறித்து, லண்டன் நகர பல்கலை கழக கல்லூரியை சேர்ந்த வானியல் நிபுணர் ஸ்டீவ் மில்லர் கூறும்போது, சூரிய குடும்பத்தின் மிக பெரும் கிரகம் வியாழன். நமது பூமியை விட 1,100 மடங்கு பெரியது மற்றும் 200 மடங்கு எடை கொண்டது. நாம் வாழும் பூமியை விட வேறுபட்ட உலகம் கொண்டது. அது பாறை மற்றும் சமுத்திரங்களால் ஆனதல்ல.
அது வாயுக்கள் நிறைந்த பெரிய கிரகம். அது பல்வேறு வானிலை அமைப்புகளை கொண்டது. அதனால் அதன் மேற்பரப்பில், கோடுகள், மண்டலங்கள் மற்றும் பிற அம்சங்கள் பார்க்கும் வகையில் உள்ளது.அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு நிபுணரான டாக்டர் கிறிஸ் ஆர்ரிட்ஜ் கூறுகையில், பைனாகுலர் வழியே வியாழன் கிரகத்தை தெளிவாக பார்க்க முடியும். அதனுடன் வியாழன் கிரகத்தின் 4 மிக பெரும் துணை கோள்களையும் தெளிவாக பார்க்க முடியும். அவை வியாழன் கிரகத்தை சுற்றி வருவதை சில தினங்கள் பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி