செய்திகள்,திரையுலகம் சசிகுமாரை ‘மாமா’ என அழைக்கும் நடிகை அனன்யா!…

சசிகுமாரை ‘மாமா’ என அழைக்கும் நடிகை அனன்யா!…

சசிகுமாரை ‘மாமா’ என அழைக்கும் நடிகை அனன்யா!… post thumbnail image
சென்னை :-‘நாடோடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனன்யா. தொடர்ந்து சீடன், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் சிறிதுகாலம் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் இப்போது புலிவால் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ…

* உங்களுக்கு எந்த மாதிரியான படங்கள், கேரக்டர்கள் செட் ஆகும்னு நினைக்கிறீங்க.?

ரொம்ப சிம்பிள் கதை, சாதாரண பெண்கள் போல் வரும் கேரக்டர்கள், பக்கத்து வீட்டு பெண் தோற்றமான கதாபாத்திரங்கள், எளிமையான கதைக்கு தான் நான் செட் ஆவேன் என்று நினைக்கிறேன். கிளாமர் நமக்கு செட்டாகாது.

* 2008-ல் இருந்து இன்டஸ்ட்ரில இருக்கீங்க, உங்க தேடலுக்கான களம் அமைந்ததா.?

சத்யமா தமிழ்ல இல்லை. நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படங்கள் தான் மக்கள் மனசில நான் கொஞ்சம் நின்றேன் என நினைக்கிறேன். ஆனால் சீடன் படம் சரியா போகலைன்னாலும் என் கேரக்டர் எல்லோராலும் கவனிக்கப்பட்டது.

* மலையாளம், தமிழ், தெலுங்கு எந்த மொழியில வெயிட்டான ரோல் உங்களுக்கு கிடைக்குது.?

மலையாளத்தில் நிறைய கேரக்டர் பண்ணிட்டேன், அடுத்தப்படியாக தமிழ்ல கொஞ்சம் படங்கள்.

* உங்களோடு வந்த நடிகைகள் பல படங்களில் நடிச்சிட்டாங்க, உங்களுக்கு வந்த இடைவெளி பத்தி கவலைபட்டிங்களா.?

தமிழ்ல 4 படங்கள் தான் பண்ணியிருக்கேன். 2 படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இருக்கு. 2008-ல் இருந்து இப்ப வரைக்கும் கணக்கு பண்ணினால் வருடத்திற்கு ஒரு படம் தான் நடித்திருக்கேன். எங்கேயும் எப்போதும் படம் பிறகு ஒரு இடைவெளி இருந்தது உண்மை தான். நிறைய படங்கள் பன்றதவிட குறைந்த படங்களாக இருந்தாலும் நல்ல ரோல்கள் மக்கள் மனசில் நிக்குற மாதிரி பண்ணனும். அது எனக்கு கிடைத்தது, இன்னும் கிடைக்கும் என நம்புகிறேன்.

* மலையாளத்தில் எத்தனை படம் நடிச்சிருக்கீங்க? யார் கூட இன்னும் ஜோடியாக நடிக்கவில்லை..? என்னமாதிரி வித்தியாசமான கேரக்டர்களில் நடிச்சிருக்கீங்க…?

மலையாளத்தில் 25, 30 படங்கள் பண்ணியிருக்கேன். மம்முட்டி, சுரேஷ் கோபி இவங்ககூட மட்டும் படம் பண்ணல. மலையாளத்தில் கொஞ்சம் மாடர்ன் ரோல் நடிச்சிருக்கேன், அம்மா கேரக்டர் கூட நடிச்சிருக்கேன். அந்த கேரக்டர் அவ்வளவு ஸ்டராங், அதனால் ஒப்புக்கொண்டேன்.

* உங்க நட்புக்குரிய நடிகர், இயக்குநர் சசிகுமார் பற்றி சொல்லுங்க?

எனக்கு அடையாளம் கொடுத்த படம் நாடோடிகள். இப்பவும் சசிகுமாரை மாமானு கூப்பிட்டு என் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்கிறேன். எனக்கு குருவா, நண்பரா, எனக்கு வழிகாட்டியாக இருப்பவர். ஒரு நடிகை, நடிகர் என்ற உறவை தாண்டி நல்ல நட்போட இருப்பவர் சசி. எனக்கு இவ்வளவு தூரம் வழிகாட்டியர் சசி தான்.

* புலிவால் படத்தில் நீங்க, ஓவியா, இனியா இப்படி பல ஹீரோயின்கள் நடிச்சிருக்கீங்க? அதைப்பற்றி..?

எனக்கு இதில் எந்த பிராபளமும் இல்லை. மலையாளத்தில் 5 ஹீரோயின்கள் சேர்ந்து நடிச்சிருக்கோம். நல்ல பிரண்ட்ஸ் நாங்க. பாமா, மேக்னாராஜ், ஸ்வேதா மேனன், இன்னொரு புதுப்பெண், நான், படம் முடியும் வரை நாங்க நண்பர்கள் தான். ஒவ்வொரு ஹீரோயினுக்கும் நல்ல ரோல் தான். நாடோடிகள் அபிநயா கூட நடிச்சேன். எங்கேயும் எப்போதும் அஞ்சலி கூட நடிச்சிருக்கேன்.

எத்தனை ஹீரோயின் என்றாலும் எனக்கு எந்த பிராபளமும் இல்லை. கதை பிடித்திருந்தால் போதும். புலிவால் படமும் அப்படித்தான். அது ஏற்கனவே மலையாளத்தில் வந்த படம் என்றாலும், தமிழுக்காக மாரிமுத்து நிறைய மாற்றங்கள் செய்தார். மேலும் இந்தப்படம் ஒரு த்ரில்லர் படம் என்பதாலும் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

* உங்க நடிப்பு ஸ்டைல் இயல்பாக இருக்குமா, இல்ல நடிக்கனும்னு நினைப்பிங்களா.?

நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வெறும் அனன்யாவா வருவேன். ஒன்னும் மண்டையில் இருக்காது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர்கள் சொல்லிக் கொடுப்பதை நான் திரும்ப அப்படி செய்கிறேன். வற்புறுத்தி நடிப்பை காட்டுறதில்லை.

* படத்தில் உங்களுக்கு வராத விஷயங்கள் என்று எதை சொல்வீர்கள்..?

நான் நடிச்ச தமிழ் படங்களில் லவ் சீன்கள் அதிகமாக கிடையாது. மலையாளத்தில் கொஞ்சம் பாட்டு இருக்கு. ஆரம்பத்தில் காதல் காட்சிகளில் நடிக்க கொஞ்சம் வெட்கப்பட்டேன், இரண்டு-மூன்று படங்களுக்கு பிறகு இது ஒரு நடிப்பு, வேலை என்று புரிந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

* நிறைய மலையாள நடிகை பாடுறாங்களே, நீங்க பாடுவீங்களா…?

மலையாள ஆல்பம் பாடியிருக்கேன். மலையாளத்தில் 100 டிகிரி செல்ஷியஸ் என்ற படத்தில் பாடியிருக்கேன். தமிழில் வாய்ப்பு கிடைத்தாலும் பாடுவேன்.

* தமிழில் இனி உங்களை அதிகம் பார்க்கலாமா…?

தமிழில் நிறைய நல்ல கதையுள்ள படங்களில் நடிக்க ஆசையிருக்கு. தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என பல துறைகளிலும் ஆர்வம் இருக்கு. எதுவாக இருந்தாலும் காலம் தான் முடிவு பண்ணும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி