செய்திகள்,திரையுலகம் இயேசுநாதரின் பெருமையை கூறும் திரைப்படம் ‘சன் ஆம் காட்’ வெள்ளி கிழமை ரிலீஸ்…

இயேசுநாதரின் பெருமையை கூறும் திரைப்படம் ‘சன் ஆம் காட்’ வெள்ளி கிழமை ரிலீஸ்…

இயேசுநாதரின் பெருமையை கூறும் திரைப்படம் ‘சன் ஆம் காட்’ வெள்ளி கிழமை ரிலீஸ்… post thumbnail image
ஹாலிவுட்:-ஹாலிவுட்டில் பைபிளை அடிப்படையாக பல திரைப்படங்கள் வந்தாலும் அனைத்துமே வெற்றி பெற்றுள்ளது. அந்தவரிசையில் தற்போது வரவிருக்கும் புதிய பைபிள் கதைதான் சன் ஆம் காட் என்ற திரைப்படம்.

ஹிஸ்ட்ரி தொலைக்காட்சியில் சீரியலாக வந்த இந்த கதை தற்போது திரைப்படமாக உருவெடுத்துள்ளது. இந்த படத்தின் திரைக்கதையை எழுதியவர்கள் Roma Downey, Mark Burnett ஆகிய இருவர் ஆகும். கிறிஸ்டோபர் ஸ்பென்சர் என்ற இயக்குனர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.நாளை மறுநாள் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள இந்த திரைப்படத்தின் இசையை Lisa Gerrard, Lorne Balfe, Hans Zimmer ஆகிய மூவரும் சேர்ந்து அமைத்துள்ளனர்.

இந்த படத்தில் Diogo Morgado என்ற நடிகர் இயேசுநாதர் வேடத்திலும், Darwin Shaw என்பவர் சைமன் பீட்டர் என்ற வேடத்திலும், Roma Downey என்ற நடிகை கன்னிமேரி மாதாவாகவும் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் பல இந்திய மொழிகளில் இந்த படம் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீஸ் ஆகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி