செய்திகள்,திரையுலகம் ரஜினி அழைத்தாலும் அவர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன்… அனிருத்!….

ரஜினி அழைத்தாலும் அவர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன்… அனிருத்!….

ரஜினி அழைத்தாலும் அவர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன்… அனிருத்!…. post thumbnail image
சென்னை:-3 படத்தில் அறிமுகமானவர் அனிருத் அவரது இசைப்பயணம், விஜய்-முருகதாஸ் படம் வரை தொடர்ந்து வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் ரஜினியின் படங்களுக்கு அனிருத் இசையமைப்பாரா? என்ற செய்தி ஊடகங்களில் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டு இருக்கின்றது. ரஜினியின்நெருங்கிய உறவினர்தான் அனிருத் என்பது எல்லோருக்கும் தெரியும்.இந்நிலையில் ரஜினியின் படங்களுக்கு இசையமைப்பது குறித்து அனிருத் தற்போது ஒரு விளக்கம் தெரிவித்துள்ளார்.

ரஜினி தன் படங்களுக்கு இசையமைக்க என்னை அழைத்தால் கண்டிப்பாக நான் அவர் படத்துக்கு இசையமைக்க மாட்டேன். அவருடைய உறவினர் என்பதால், அந்த உறவை பயன்படுத்தி நான் வாய்ப்பு பெற்றதாக பேசக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும். ரஜினியின் பட இயக்குனர் என்னிடம் நேரடியாக கேட்டுக்கொண்டால் மட்டுமே அவர் படங்களுக்கு இசையமைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி