இந்நிலையில் கோச்சடையான் ரிலீஸ் ஆகவுள்ள அதே தினத்தில் விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்‘ படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இயக்குனர் திரு கூறியபோது, நாங்கள் படத்தை துவங்கும்போதே படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்வதாக தீர்மானித்துவிட்டோம். எனவே எங்கள் முடிவில் இருந்த நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. ரஜினியின் கோச்சடையானுடன் மோதுவதால் எங்களுக்கு எவ்வித பாதிப்பும் வரப்போவதில்லை. என் திரைக்கதையின் மீது எனக்கு அபார நம்பிக்கை உள்ளது.
அதோடு விஷாலின் அதிரடி ஆக்ஷனும் கலந்துள்ளதால் இந்த படத்தின் வெற்றி குறித்து எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே ரஜினி படத்துடன் மோதுவது குறித்து எவ்வித தயக்கமும் இல்லை.மேலும் கோலிவுட்டில் சிலர் ‘ரஜினி படத்தின் டைட்டிலை வைத்துக்கொண்டு ரஜினியுடனே மோதுகிறாரே என்று இவர் காதுபடவே பலர் பேசுகின்றனராம். ஆனால் அதுகுறித்து எவ்வித கவலையும் இன்றி தனது படத்தின் ரிலீஸ் வேலையை பார்த்துகொண்டிருக்கிறார் திரு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி