மறைந்த பிரபல நடிகை நூடன் அவர்களின் மகன் மோனீஷ் ஃபெல். இவரும் பாலிவுட்டின் சில படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நேற்று ஒரு குழந்தை மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வீட்டின் காவலாளி கொடுத்த புகாரின் பேரில் நேரில் வந்த போலீஸார், சில நாட்களே ஆன ஒரு குழந்தை மிதந்து கொண்டிருப்பதை பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த குழந்தை இரண்டு நாட்களாகவே நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டு இருந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாகத்தான் நீச்சல் குளத்தின் உள்ள தண்ணிரில் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பண்ணை வீட்டிற்கு நடிகர் மோனிஷ் இரண்டு மாதங்களாக வரவே இல்லையாம். பண்ணை வீட்டை காவலாளி மட்டுமே பராமரித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பச்சிளங்குழந்தையை யார் இந்த நீச்சல் குளத்தில் போட்டிருப்பார்கள் என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி