அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின், காஜல் அகர்வாலை நண்பேண்டா படத்தில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, மீண்டும் நயன் தாராவை தனக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். நண்பேண்டா படத்தில் வரும் ஹீரோயின் கேரக்டருக்கு காஜல் அகர்வாலை விட நயன் தாராதான் மிகப்பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் ஜெகதீஷ் கூறியதால் உடனடியாக காஜல் நீக்கப்பட்டார்.
இதனால் வருத்தமடைந்த காஜல் தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை உதயநிதியிடம் கொடுக்க முன்வந்தார். ஆனால் உதயநிதி அட்வான்ஸ் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை. இந்த பணம் தனது அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் பணமாக இருக்கட்டும் என்றும் தனது அடுத்த படத்தில் கண்டிப்பாக காஜல்தான் ஹீரோ என்றும் சொல்லி பணத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார். இதனால் காஜல் அகர்வால் மகிழ்ச்சியில் எல்லையில் உள்ளதாக தகவல். காஜல் அகர்வால் தற்போதெலாம் உதயநிதியின் கேரக்டரை போற்றி புகழ்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி