பிரியதர்ஷனின் சில தொழில்நிறுவனங்களை மனைவி லிசி கவனித்து கொண்டிருந்ததாகவும், அவற்றில் ஒரு நிறுவனத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் லிசியை பிரியதர்ஷன் பிரிவதற்கு முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் இதுவரை நிறுவனங்களை நிர்வாகம் பார்த்த பணிகளுக்காக ரூ.80 கோடி ஊதியம் வேண்டும் என கணவர் பிரியதர்ஷனுக்கு லிசி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால், பிரியதர்ஷன் அதிர்ச்சி அடைந்தார்.
இதன்காரணமாக மனைவியுடன் மீண்டும் சமாதானமாகிவிடலாம் என்று முடிவு செய்து இருதரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் இருவரும் இணைந்துவிட்டனர். தற்போது பிரியதர்ஷனின் அனைத்து நிறுவனங்களையும் மீண்டும் லிசியே கவனிப்பார் என்று கூறப்படுகிறது.நடிகை லிசி ரூ.80 கோடி அதிரடியாக கேட்டதால்தான் பிரியதர்ஷன் வேறு வழியின்று சேர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆக இருவரையும் இணைத்து ரூ.80 கோடிதான் இணைத்து வைத்துள்ளது என்று மாலிவுட் முழுவதும் பேச்சு அடிபடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி