செய்திகள்,திரையுலகம் ‘மருதநாயகம்’ படத்தை தயாரிக்கும் ஹாலிவுட் நிறுவனம்!…

‘மருதநாயகம்’ படத்தை தயாரிக்கும் ஹாலிவுட் நிறுவனம்!…

‘மருதநாயகம்’ படத்தை தயாரிக்கும் ஹாலிவுட் நிறுவனம்!… post thumbnail image
சென்னை:-அட்டகத்தி தினேஷ், மாளவிகா நடிக்கும் படம் குக்கூ. லிங்குசாமி உதவியாளர் ராஜு முருகன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ மற்றும் தி நெக்ஸ் பிக் பிலிம் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் ஆடியோவை கமல்ஹாசன் வெளியிட சூர்யா பெற்றார். பிறகு இருவரும் பட யூனிட்டை வாழ்த்தி பேசினார்கள். படத்தின் டிரைலரை எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட டைரக்டர் லிங்குசாமி பெற்றார்.விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் பேசும்போது, இந்த விழாவில் பங்கேற்றிருக்கும் கமல்ஹாசன் ஹாலிவுட் நடிகராக இருந்திருந்தால் இப்போது செய்திருக்கும் சாதனைகளைவிட இன்னும் பெரிய சாதனைகள் படைத்திருப்பார்.

மருதநாயகம் என்பது அவருடைய கனவு படம். இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பை தொடர முடியாமல் நின்றிருக்கிறது. ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் இப்படத்தை தயாரிக்க முன் வரவேண்டும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி