செய்திகள்,திரையுலகம் மனைவி அமைவதெல்லாம்(2014) திரை விமர்சனம்…

மனைவி அமைவதெல்லாம்(2014) திரை விமர்சனம்…

மனைவி அமைவதெல்லாம்(2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஒரு வீட்டில் 2 குடும்பம் வாழ்ந்து வருகிறது. ஒன்று மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி, மற்றொரு குடும்பம் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி.மோகன்ராஜின் மனைவி சசி, எப்போதும் தன் கணவர் மீது சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறார். இதனால் மோகன் ராஜுக்கு கவலை. பாஸ்கர் எப்போதும் குடித்துக் கொண்டு வேலைக்கு சரியாக போகாமல் இருக்கிறார். இதனால் மனைவி சுமதிக்கு தன் கணவர் இப்படி இருக்கிறார் என்று கவலை. இதனால் இருவர் வீட்டிலும் அடிக்கடி சிறுசிறு பிரச்சனைகள் வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் அந்த வீட்டின் உரிமையாளர் மகன் சந்துருவுக்கு, நமக்கு திருமணம் நடந்தால் இப்படித்தான் இருக்கும் என திருமணம் செய்ய தயங்கி கொண்டிருக்கிறார்.

ஒருநாள் சந்துருவுக்கு, அனைவரும் பெண் பார்க்க செல்கிறார்கள். மணப்பெண்ணை பார்த்து வீட்டுக்கு திரும்பிய சந்துரு, அந்த பெண் எப்படிப்பட்டவள், உங்கள் மனைவி போல் எனக்கு அமைந்துவிடக் கூடாது என்று மோகன்ராஜிடம் கூறுகிறான். மேலும் அந்த பெண் குறித்த முழு விபரத்தை அறிந்து சொல்லுங்கள் என்று விசாரிக்க சொல்கிறார். அதற்கு சம்மதித்து செல்லும் மோகன்ராஜ், ஒரு நாள் வழியில் சந்துருவுக்கு பார்த்த பெண்ணை சந்தித்து பேசுகிறார் மோகன்ராஜ். அதை அவரின் மனைவி சசி பார்த்து விடுகிறாள். தவறாக புரிந்து கொண்ட சசி கோபத்தில் தன் தாலியை பாத்ரூம் கதவில் தொங்க விடுகிறார். இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது.

இறுதியில் தன் மனைவியின் சந்தேக குணத்தை மோகன்ராஜ் மாற்றினாரா? சந்துருவுக்கு திருமணம் நடந்ததா? சுமதி, பாஸ்கரை மாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் மோகன்ராஜ் கால் நொண்டி நொண்டி வருகிறார், ஆனால் ஒரு சில காட்சிகளில் நொண்டாமல் வருகிறார். காமெடி என்னும் பெயரில் இவர் செய்யும் விஷயங்கள் கொஞ்சம்கூட ரசிக்கும் படியாக இல்லை. அவர் மனைவியான சசி கதாபாத்திரத்தில் வரும் பாக்ய ராஜேஷ்வரி சந்தேகப்படும் காட்சிகளில் தவிர ஒரு சில காட்சிகளில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

மற்ற கதாபாத்திரத்தில் வருபவர்கள் அனைவரும் நடிப்பு என்னும் பெயரில் ஏதேதோ செய்கிறார்கள். படத்தில் நிறைய கதாபாத்திரங்களை வைத்து தேவையற்ற காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் உமா சித்ரா. சொல்ல வருவதை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். படத்தில் அனைவரும் காமெடி செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டு பார்ப்பவர்களை கோபப்படுத்துகிறார்கள். ஒரு காட்சியில்கூட சிரிப்பு வரவில்லை. நல்ல கதையை வைத்துக்கொண்டு அதை எப்படி கையாளத்தெரியாமல் விட்டுவிட்டார் உமா சித்ரா.

படத்தில் பிண்ணனி இசை காட்சிகளுக்கு கொஞ்சம்கூட பொருந்தவில்லை. நிறைய காட்சிகளில் இசையே அதிகம் கேட்கிறது. கதாபாத்திரங்கள் பேசும் வசனம் புரியவில்லை. படத்தின் எடிட்டிங் சம்பந்தம் இல்லாமல் காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் ஒரு வீட்டை காட்டுகிறார்கள். மறுகாட்சியில் வேறொரு வீட்டில் இருக்கிற மாதிரி காட்டியிருக்கிறார்கள். காட்சிகள் தொடர்ச்சி இல்லாமலேயே இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவில் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். பழைய படத்தின் இசையையே பாடல்களுக்கு போட்டு சொதப்பியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘மனைவி அமைவதெல்லாம்’ ஒருமுறை பார்க்கலாம்….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி