ஆண்ட்ரியா ஏற்கனவே சில மலையாள படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகர் பகத் பாசிலுடன் இணைத்து பேசப்பட்டார். மலையாள படங்களில் தொடர்ந்து நடிக்க முயற்சி செய்தார். அதன் விளைவாக இந்த பட வாய்ப்பு கிட்டியுள்ளது.இதன் மூலம் அங்கு இன்னொரு ரவுண்ட் வரும் முடிவில் இருக்கிறார். தனக்கு போட்டியாக ஆண்ட்ரியாவை இந்த படத்தில் சேர்த்ததோடு தனது காட்சிகளை குறைத்து முக்கியத்துவம் இல்லாமல் செய்து விட்டார்கள் என்று ஸ்ரேயா கடுப்பாகி இருக்கிறார்.
ஆண்ட்ரியாவை முன்னணி நாயகியாக்கி விட்டு தன்னை இரண்டாம் நாயகியாக்கி விட்டனர் என்று குற்றம் சாட்டினார். இதையடுத்து அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகி விட்டார். இருவருக்கும் பனிப்போர் துவங்கியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி