கேரளா வந்திருந்த அவரிடம் அதுபற்றி கேட்டபோது கூறியதாவது: தமிழ் படங்களில் 90களில் தொடங்கி நடித்து வருகிறேன். இதைத்தொடர்ந்து கன்னடம், இந்தி படங்களில் நடித்து வந்தேன். ஹீரோயினாக மட்டுமல்லாமல் கேரக்டர் வேடங்களிலும் நடிக்கிறேன்.கேரளாவுக்கு ஷூட்டிங்கிற்காக அவ்வப்போது வந்திருப்பதுடன் எனக்கு பிடித்த இடம் என்பதால் விடுமுறையிலும் வருவேன். எந்த நடிகரை பிடிக்கும் என்கிறார்கள். மம்மூட்டி, மோகன்லால் பிடிக்கும் அதேசமயம் அழகான நடிகர் என்ற வகையில் பிருத்விராஜை ரொம்ப பிடிக்கும்.
பலரும் எனது திருமண வாழ்க்கையை பற்றி கேட்கிறார்கள். அது முடிந்துபோன விஷயம். அது பற்றி பேச விரும்பவில்லை. இப்போதைக்கு நான் காதலில் விழவில்லை. அதனால் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். அதுவே மகிழ்ச்சி.என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி