அஜீத் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கவுள்ள படத்தில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. ஆனால் அனுஷ்கா, பாஹுபாலி, மற்றும் ராணிருத்ரம்மா தேவி படத்திற்காக மிக அதிக அளவிலான நாட்களில் கால்ஷீட் கொடுத்திருந்த காரணத்தால் கவுதம் மேனன் கேட்ட தேதிகளில் அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. எனவே அனுஷ்கா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து அஜீத்துடன் நடிக்க பல நடிகைகள் விருப்பம் தெரிவித்து கவுதம் மேனனுக்கு தூது விட்டனர். ஆனால் கவுதம் மேனன் தனது ஆஸ்தான நடிகை சமந்தாவை அஜீத்துக்கு ஜோடியாக்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் படங்களில் சமந்தா ஏற்கனவே நடித்துள்ளதால் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. சமந்தாவும் இந்த வாய்ப்பை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி