இந்தப் படம் வெகு நேர்த்தியாகவும், நவீன உத்திகளுடனும் தயாரிக்கப்பட இருப்பதால் ஒப்பனைக் கலைஞர்களிலிருந்து நடனக் கலைஞர்கள் வரை ஹாலிவுட்டிலிருந்து வரவழைக்கப்பட உள்ளனர். அஜீத்தும் சமீபத்திய கருப்பு, வெள்ளை தலைமுடியுடன் கூடிய தோற்றத்தை மாற்றி இந்தப் படத்தில் இளமையாகக் காட்சியளிக்க உள்ளார். இதற்காக தினமும் ஜிம்மில் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார்.
இதில் அஜீத் ஜோடியாக நடிக்க அனுஷ்காவை முதலில் தேர்வு செய்தனர். தற்போது அவரை நீக்கிவிட்டு மும்பையில் இருந்து புது நாயகியை தேடுகிறார்கள். அனுஷ்கா எடை போட்டதால் மாற்றி விட்டார்களாம்.அஜீத்தின் படங்களில் இதுவே மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி