செய்திகள்,திரையுலகம் அஜித் வேடத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!…

அஜித் வேடத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!…

அஜித் வேடத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!… post thumbnail image
மும்பை:-தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்தவரிசையில் அஜீத் நடிக்க விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் இந்தியில் ரிமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் அஜீத் வேடத்தை சல்மான் கான் ஏற்பதாக பாலிவுட்டில் தகவல் வெளியானது.

தற்போது அந்த வேடத்துக்கு போட்டி எழுந்துள்ளது. படம் ரிலீசானதுமே அதை ஷாருக்கான் துபாயில் இருந்தபடியே பார்த்தார். விஷ்ணுவர்தனை அவர் பாராட்டினார். அப்பட ரீமேக்கில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்தார். வேறு படத்தில் அவர் பிசியாக இருந்ததால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. மற்றொரு பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார்‎, அஜீத் வேடத்தில் நான்தான் நடிப்பேன் என்று கோதாவில் இறங்கி இருக்கிறார்.இவர்தான் ஆரம்பம் படத்தின் ரீமேக் உரிமை வாங்கி வைத்திருக்கிறாராம். ஷாருக்கான் இந்த போட்டியிலிருந்து விலகிவிட்ட நிலையில் சல்மான்கான், அக்‌ஷய் குமார்‎ இடையேதான் ஆரம்பம் ரீமேக்கில் நடிக்க போட்டி நிலவுகிறது.

அக்ஷய்குமாரிடமிருந்து ஆரம்பம் உரிமையை வாங்குமாறு பிரபல தயாரிப்பாளருக்கு சல்மான் உத்தரவு போட்டுள்ளாராம். பெரிய தொகை கொடுத்தால் உரிமையை அக்‌ஷய் விட்டுக்கொடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்தபோட்டியில் வேறு யார் வருவார்கள், ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்த ஆர்யா வேடத்தில் நடிக்கப்போவது யார் என்ற விவரமும் இதுவரை முடிவாகவில்லையாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி