நியூயார்க்:-அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் டேவிட் ரந்தா (59). இவர் யுதமதகுரு சாஸ்கெல் வெர்ஸ் பெர்கர் என்பவரை கொலை செய்ததாக கடந்த 1990–ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டார்.
23 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். இதற்கிடையே மதகுருவை அவர் கொலை செய்யவில்லை என தெரியவந்தது. எனவே, செய்யாத குற்றத்துக்காக ஜெயில் தண்டனை அனுபவித்த டேவிட் ரந்தா விடுதலை செய்யப்பட்டார்.
மேலும், அவருக்கு ரூ. 40 கோடி நஷ்டஈடு தொகையும் வழங்கப்பட்டது. இதில் விசேஷம் என்னவென்றால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மறுநாளே டேவிட் ரந்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி