போர்ட் எலிசபெத்:-ஆஸ்திரேலிய அணியுடன் போர்ட் எலிசபெத், செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அரை சதம் கடந்த தென் ஆப்ரிக்க வீரர் டிவில்லியர்ஸ் உலக சாதனை படைத்தார்.
அவர் கடைசியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 12 அரை சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், இந்தியாவின் வீரேந்திர சேவக், கவுதம் கம்பீர் ஆகியோர் தொடர்ச்சியாக 11 டெஸ்டில் அரை சதம் அடித்துள்ளனர். அவர்களது சாதனையை முறியடித்து டிவில்லியர்ஸ் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி