செய்திகள்,திரையுலகம் நடிகையிடம் சில்மிஷம் செய்த ரசிகர்!…

நடிகையிடம் சில்மிஷம் செய்த ரசிகர்!…

நடிகையிடம் சில்மிஷம் செய்த ரசிகர்!… post thumbnail image
சிட்னி:-அமெரிக்காவில் வெளியாகும் சினிமா மற்றும் டி.வி. தொடர் பிரபல நடிகை ஷாரா ஐலாந்து (23). நியூயார்க் நகரில் வசித்து வரும் இவர் நடித்த ‘மார்டன் பேமலி’ என்ற நகைச்சுவை தொடர் மிகவும் பிரபலமாகும். இவர் சக நடிகர், நடிகைகளுடன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

அங்கு சிட்னி நகரிலுள்ள பிரபல ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க ஷாரா சென்ற போது ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள போட்டி போட்டனர்.அப்போது 29 வயதுள்ள ஒரு ரசிகர் யாரும் எதிர்பாராதவிதமாக நடிகையின் நெஞ்சை தொட்டு செக்ஸ் குறும்பில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை ஷாரா தனது பாதுகாப்பாளர்களிடம் கூற, அவர்கள் சில்மிசத்தில் ஈடுபட்ட ரசிகரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட ரசிகரை நியூவேல்ஸ் போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘கைது நடவடிக்கைக்கு பிறகு அந்த 29 வயது இளைஞரை ஜாமீனில் விடுவித்து விட்டோம். மார்ச் 14-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்’ என்றார். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரசிகருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி