புளோரிடா:-அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சரசோட்டா கவுன்டி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோ நியுமேன் (101). இவர் அப்பகுதியில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ நியுமேன் டிவிக்கு அளித்த பேட்டியில், இப்பகுதியில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சியினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. எனவே மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன். இந்த வயதில் என்ன செய்ய முடியும் என்று என்னை பலரும் கேலி பேசுகின்றனர். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.
ஏற்கனவே 1989ம் ஆண்டு எலிசபெத் என்பவர் தனது 103 வயதில் மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி