செய்திகள் அமெரிக்காவில் இந்திய பீடிக்கு திடீர் தடை!…

அமெரிக்காவில் இந்திய பீடிக்கு திடீர் தடை!…

அமெரிக்காவில் இந்திய பீடிக்கு திடீர் தடை!… post thumbnail image
நியூயார்க்:-மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள ஜாஷ் நிறுவனம் ‘சுத்ரா’ என்ற வணிக அடையாளப் பெயரில் நான்கு வகை பீடிகளை தயாரித்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த பீடி வகைகள் அமெரிக்க புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டி நடைமுறைகளுக்கு ஏற்ற முறையில் இல்லை என குற்றம்சாட்டிய வாரியம், சுத்ரா பீடிகளை அமெரிக்காவில் இறக்குமதி செய்யவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என தடை விதித்துள்ளது.

இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க ஜாஷ் நிறுவனம் தவறி விட்டதால், தயாரிப்பு தேதியை கருத்தில் கொள்ளாமல் சுத்ரா வகை பீடிகளை அமெரிக்க அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி