புதுடெல்லி:-ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 25-ம்தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து கேப்டன் டோனி விலகினார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த டோனி, காயம் குணமாகாததால் இந்த தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோனி விலகியதையடுத்து ஆசியக் கோப்பைக்கான இந்திய அணிக்கு விராட் கோலி தலைமை தாங்குவார். விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார். இதனை பி.சி.சி.ஐ. இன்று உறுதி செய்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி