அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது…திமுக கோரிக்கை!…

கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது…திமுக கோரிக்கை!…

கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது…திமுக கோரிக்கை!… post thumbnail image
புதுடெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா‘ விருது வழங்க வேண்டும் என அக்கட்சியின் எம்.பி. தாமரை செல்வன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.

மக்களவையில் இன்று திமுக எம்.பி.யான ஆர்.தாமரை செல்வன், இது தொடர்பாக விடுத்த கோரிக்கையில்,”கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பத்து கோடி தமிழர்களின் கோரிக்கை. கருணாநிதி தம் 14 வயதில் பொதுமக்களுக்கு தொண்டு செய்ய அரசியலுக்கு வந்தவர்.திராவிட இயக்கத்தின் சாம்பியனான இவர், கீழ்மட்டத்தில் இருந்து அனைத்து தரப்பிலான மக்களுக்காக சேவை செய்தவர். 1957 முதல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இடையில் ஒருமுறை கூட தோல்வி கண்டதில்லை. தீவிர அரசியலுடன் தமிழ் இலக்கியத்திற்காகவும் முக்கியத்துவம் அளித்தவர்.

தமிழ்ப் பட உலகின் 75 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர். 91 வயதிலும் சிறந்த விளங்கும் அறிஞர், சிறந்த ராஜதந்திரி மற்றும் பாடலாசிரியர் ஆவார். தேசிய ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கத்திற்காக மாநில மற்றும் தேசிய அளவில் பாடுபட்ட அரசியல்வாதி. இந்த வயதில் வேறு எவரும் இவர் அளவுக்கு நாட்டிற்காக பாடுபட்டதில்லை என நம்புகிறேன்.இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அனைவரும் கருணாநிதிக்கு பாரத ரத்னா பட்டம் அளிப்பதில் என்னுடன் இணைந்து அரசிடம் வலியுறுத்துவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி