படத்தின் பெயர் ‘ராதா‘. இந்த படத்தில் நயன்தாரா உள்துறை அமைச்சருக்கு பி.ஏ.வாக நடிக்கிறார். அதன்பின்னர் உள்துறை அமைச்சரிடம் காதல் கொண்டு டூயட் எல்லாம் பாடுகிறார்.இந்த படத்தில் இதுவரை இல்லாத கிளாமரை அள்ளி தெளித்துள்ளாராம் நயன்தாரா. அவருடைய கிளாமர் ஸ்டில்கள் ஐதராபத்தின் சுவர்களை எல்லாம் அலங்கோலப்படுத்தி உள்ளதாக டோலிவுட்டில் கூறுகின்றனர்.
உள்துறை அமைச்சராக இருக்கும் வெங்கடேஷ், தனது அதிரடி நடவடிக்கைகளின் மூலம் முதலமைச்சராக மாறுவதுதான் கதையாம். ஏற்கனவே அரசியலில் நுழையும் கனவி இருக்கும் வெங்கடேஷுக்கு இந்த படம் பூஸ்ட் கொடுத்தது போல் இருக்கும் என கூறப்படுகிறது. சிரஞ்சீவி போல தானும் ஆந்திர அரசியலில் கலக்க வேண்டும் என்ற எண்ணம் இவர் மனதில் இருக்கின்றதாம். இந்த படத்தின் வெற்றியை பொருத்து வெங்கடேஷின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை இருக்குமென டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி