இயக்குனர் பி.வாசு ஐஸ்வர்யாராயை சந்தித்து கதை கூறியது உண்மைதான் என்றும் ஆனால் ஐஸ்வர்யாராய் இதுபோன்று பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதால் இன்னும் எந்த படத்தில் நடிப்பது என்று முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.இந்நிலையில் ஐஸ்வர்யாராய், தனக்கு மிகவும் பிரியமான பிரமாண்ட இயக்குனர் ஒருவரிடம் பி.வாசு குறித்து விசாரித்ததாகவும், அவர் பி.வாசுவை பற்றி நல்லவிதமாக கூறாததால், பி.வாசு படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது.
ரஜினியின் குசேலன் படத்தை பி.வாசு சொதப்பிய விதத்தை அந்த இயக்குனர் ஐஸ்வர்யாராயிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பி.வாசு அதிர்ச்சி அடைந்துள்ளர். எனவே வாசு படத்தில் அவர் நடிப்பது சந்தேகம்தான் என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் மணிரத்னம் படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய்க்கு விருப்பம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி