உலகம் முழுவதும் கொல்லப்பட்ட 134 பேரில் 20 பேர் சிரியாவில் நடந்த ஆயுதத் தாக்குதலிலும், 16 பேர் ஈராக்கிலும், 51 பேர் ஊழல் மற்றும் குற்றச்சம்பவங்களிலும், 18 பேர் விபத்துக்களிலும் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் இந்த நாடுகளின் பட்டியலில் சிரியா மற்றும் ஈராக் நாடுகளை தொடர்ந்து பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவிற்கு பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளின் வரிசையில் 4-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான இடங்களில் செய்திகள் சேகரிக்கும் பத்திரிகை நிருபர்களுக்கு பாதுகாப்பு பயிற்சியை வழங்கி வரும் இந்நிறுவனம் உலகின் முன்னணி செய்தி அமைப்புகளின் நிதியுதவியுடன் கடந்த 1996ம் ஆண்டிலிருந்து ஆய்வில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி