முதலில் இந்த படத்திற்கு அதிரடி என்ற டைட்டில் வைக்கப்போவதாக தகவல் வந்தது. இதையறிந்த ஒரு வில்லன் நடிகர் தான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்துக்காக உடனே அதிரடி என்று பெயர் வைத்து, பதிவும் செய்துவிட்டார். அதனால் முருகதாஸ் டைட்டில் விஷயத்தில் பொறுமை காத்து வருகிறார்.
ஏற்கனவே துப்பாக்கி படத்தின் போது டைட்டில் விஷயத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த முருகதாஸ், இப்படத்திற்கான டைட்டிலை பிரச்சனை இல்லாமல் வைக்கவேண்டும் என விரும்புகிறார். தற்போது படத்திற்கு ‘தீரன்‘ என்ற பெயர் படக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த பெயரை படக்குழுவினர்கள் உறுதிப்படுத்தவிலை.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடந்து வந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் -முருகதாஸ் படக்குழு ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரிக்கு அடுத்த வாரம் செல்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி