சூப்பர் ஸ்டார் மூன்று வேடங்களில் கலக்கிய இந்த படத்தினை ரீமேக் செய்ய விஷ்ணுவர்தன் முடிவு செய்துள்ளாராம். இதில் ரஜினி நடித்த வேடத்தில் கார்த்தி நடிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக பையா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்த தமன்னா மீண்டும் நடிக்கிறார். மற்ற நடிகர் ,நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் நடித்த வேடங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்த கார்த்திக், இந்த படத்தில் நடிப்பதன்மூலம் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார். ஒரிஜினல் படத்தில் ராதிகா நடித்த வேடத்தில்தான் தமன்னா நடிக்கிறார். ஏற்கனவே மூன்று முகம் படத்தில் வரும் அலெக்ஸ்பாண்டியன் என்ற பெயரிலேயே ஒரு படம் நடித்த கார்த்தி, தற்போது அந்த பாத்திரத்திலேயே நடிக்க இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என விஷ்ணுவர்தன் வட்டாரம் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி