ஹைதராபாத்:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படம் பிறமொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் கமல்ஹாசன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க மீனா, நதியா, சிம்ரன் போன்றோர் பரிசீலிக்கப்படுகின்றனர்.
தெலுங்கில் மோகன்லால் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாவே நடிக்கிறார்.பெண் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க நதியாவை தேர்வு செய்துள்ளனர். மகளை பாலியல் பலாத்காரம் செய்யும் பெண் போலீஸ் அதிகாரி மகனை அடித்து கொன்று மண்ணுக்குள் புதைக்கும் தாய் கேரக்டரில் மீனா வருகிறார். கொலையுண்டவன் தாய் வேடத்தில் நதியா நடிக்கிறார்.
இந்த படத்தை நடிகை ஸ்ரீபிரியா டைரக்டு செய்கிறார். இவர் சமீபத்தில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தை இயக்கி வெளியிட்டார். தொடர்ந்து இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி