விஜய்யை அரசியலில் ஈடுபட வைத்து அதன்மூலம் பதவியை பிடிக்கவேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகர் விரும்புவதாகவும், அதனால் தனது படங்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், தலைவா படம் ரிலீஸின்போது தான் சந்தித்த கடுமையான வேதனைகளுக்கு தனது தந்தையே காரணம் என்றும் மக்கள் இயக்க தலைவர்களுடன் விவாதித்த விஜய், அதன்பிறகே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
விஜய்யின் இந்த கருத்தை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இனிவரும் விஜய் பட போஸ்டரில் எஸ்.ஏ.சந்திரசேகரின் எந்தவொரு படமும் இருக்காது என்று உறுதியளித்தனர். இதற்கு முன் விஜய்யின் கிங்மேக்கர் என்று எஸ்.ஏ.சந்திரசேகருக்கே பல விஜய் ரசிகர் மன்றங்கள் கட் அவுட் வைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி