எல்லாருக்கும் ஒரு தூண்டுதல் வேண்டும். அப்படி இருந்தா தான் ஒரு பாதை கெடைக்கும். கமல் சார் போட்டுக் கொடுத்த பாதையில் இப்போதும் நான் நடக்கிறேன். அதுக்குள்ள தான் சுத்த முடியும். அதை தாண்ட முடியாது. அந்த வெச்சுக்கிட்டுத்தா அதை நோக்கிப் போகணும், இதை நோக்கிப் போகணும்னு நான் போய்க்கிட்டிருக்கேன்.
அதற்கு முழு முதற்காரணம் கமல் அண்ணன் தான். ஏற்கனவே பல தடவை சித்தப்பான்னு சொல்லிருக்கேன். ஆனா அப்படி சொல்லும் போது ரொம்ப அந்நியமா இருக்கு. அண்ணன்னு சொன்னாத்தான் கிட்டக்க இருக்கிற மாதிரி தோணுது. எனக்கு நெறைய அன்பு காட்டி நெறைய சொல்லிக் கொடுத்திருக்கார்.படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது எனக்குத் தோணுறது இதுதான்..” என்றவர் கைகளை குவித்து தரையைத் தொட்டு டைரக்டர் ராஜூமுருகன் உள்ளிட்ட படக்குழுவினர்களின் பெயர்களை சொல்லி விழா மேடையிலேயே தொட்டு வணங்கினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி