செய்திகள்,திரையுலகம் உடல் எடையை குறைக்கும் அஜீத்…

உடல் எடையை குறைக்கும் அஜீத்…

உடல் எடையை குறைக்கும் அஜீத்… post thumbnail image
சென்னை:-‘வீரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவுதம் மேனன் படத்தில் நடிக்க அஜீத் தயாராகி வருகிறார். இப்படத்தில் அஜீத் பழைய இளமையான தோற்றத்தில் நடிக்கிறாராம். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்து வருகிறாராம்.

ஏற்கெனவே, ‘ஆரம்பம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அப்படத்திற்காக ஜிம்மிற்கு சென்று உடம்பை குறைத்து வந்தார். அதன்பிறகு, ‘வீரம்’ படத்தில் கொஞ்சம் குண்டாகி விட்டார். இந்நிலையில், கவுதம் மேனன் படத்தில் ஸ்லிம்மாக தோன்ற வேண்டும் என்பதற்காக ஜிம்மிற்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.இப்படத்தில் அஜீத்தின் தலைமுடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்களாம். ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘வீரம்’ ஆகிய படங்களில் சற்றே நரைத்த முடியுடன் தோன்றிய அஜீத்தை அவரது ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர்.

ஆனால், இந்த படத்தில் அஜீத்தின் தலைமுடியின் நிறம் மற்றும் ஹேர்ஸ்டைலை வித்தியாசமான தோற்றத்தில் காட்ட முடிவு செய்திருக்கிறார்களாம். படம் வெளியாகும் வரை அவரது தோற்றத்தை ரகசியமாக வைத்திருக்கவும் படக்குழு முடிவு செய்துள்ளதாம்.இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார். வில்லனாக கார்த்திக் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இம்மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி