அந்நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளரான லீ கான்ராட் இது குறித்து கூறும்போது, 15000 ஊழியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் 1 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் இம்முடிவு இந்தியாவில் தான் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. ஆனால் இந்தியாவில் இதுவரை எவ்வளவு பேர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று எந்த தகவலும் கூறவில்லை. இந்நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் பணிபுரியும் 50 பேருக்கு பிப்ரவரி 12ந் தேதி சிவப்பு அட்டை வழக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி