லண்டன்:-சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மாநாடு லண்டனில் சமீபத்தில் நடந்தது. இந்த மாநாடுக்கு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், கால்பந்து வீரர் பெக்காம் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த மாநாட்டை ஆரம்பித்து வைக்க பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது சகோதரர் ஹாரியுடன் வந்திருந்தார்.
விழா முடிந்தவுடன் ஹாரிக்கு வாழ்த்து சொல்ல விரும்பிய நடிகர் ஜாக்கிசான், அவரது அண்ணன் வில்லியமை சந்தித்து தென் துருவ பகுதியில் காயம் அடைந்த வீரர்களுக்கு ஆறுதல் கூறிய ஹாரிக்கு நன்றி என்று கூறினார். அப்போது வில்லியம், தான் ஹாரி அல்ல என்றும், அவது அண்ணன் வில்லியம் என்றும் கூறினார்.
உடனே தனது தவறை உணர்ந்த ஜாக்கிசான், வில்லியமிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, ஹாரியை சந்தித்து மீண்டும் வாழ்த்து கூறினார்.பிரிட்டன் சகோதரர்கள் இருவருமே ஒரே மாதிரியாக இருந்ததால், இந்த தவறு நேர்ந்துவிட்டதாக ஜாக்கிசான் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி