கோபி:- நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சுற்றி திரியும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று அவர்கள் மஞ்சள் கயிறுடன் சுற்றி திரிகிறார்கள். இதனால் காதலர்கள் இவர்களுக்கு பயந்தே ஒளிந்து …ஒளிந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் இந்து முன்னணியினர் நேற்று காலை மஞ்சள் கயிறுடன் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக் கட்டுக்கு சென்றனர். அங்கு காதலர்கள் யாரும் அவர்களின் கண்களுக்கு தெரிய வில்லை.
இதை தொடர்ந்து அங்கு மேய்ந்துகொண்டு இருந்த ஒரு ஆடு மற்றும் நாய்க்கும் இந்து முண்ணனியினர் திருமணம் நடத்தி வைத்தனர். மேலும் அவர்கள் கூறும் போது, ‘‘நாங்கள் காதலர்களுக்கு எதிரானவர்கள் இல்லை.காதலர் தினத்தை தான் எதிர்க்கிறோம்’’ என்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி