விழுப்புரம் மாவட்டத்தில், ஏழு தியேட்டர்களில், இப்படம் நேற்று வெளியானது. இந்த தியேட்டர்களில், உதயநிதி ஸ்டாலின் இரசிகர் நற்பணி மன்றம் சார்பில், படம் பார்க்க வந்த ஒருவருக்கு, தலா, ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்பட்டது.விழுப்புரம் கல்யாண் தியேட்டரில், மார்னிங் ஷோ பார்த்த, 500க்கும் மேற்பட்டோருக்கு, மாவட்ட தலைவர் பிரேம், மாவட்ட செயலர் சங்கர் தலைமையில், வெங்காயம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, மன்ற தலைவர் பிரேம் கூறுகையில், படம் பார்த்து, வெளியே வருபவர்களுக்கு, ஏதேனும் பொருட்களை வழங்க வேண்டும் என்பதால், விழுப்புரத்தில் படம் திரையிட்ட, ஏழு தியேட்டர்களிலும் வெங்காயம் வழங்கினோம் என்றார்.திரை அரங்குகளிலிருந்து, வெங்காயத்துடன் வெளியே வந்த இரசிகர்களைப் பார்த்த, பொதுமக்கள் சிலர், படத்தைப் பார்த்த பின் அழுவதற்காக, வெங்காயம் வழங்கப்படுகிறதோ… என, கிண்டலடித்துச் சென்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி