நேற்று டெல்லி சென்று சேர்ந்த விஜயகாந்த், இன்று காலை எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமர் இல்லம் சென்றார்.பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த விஜயகாந்த் அவரிடம் தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தார்.அப்போது, தமிழக மீனவர்கள் பிரச்சினை நீண்டகாலமாக நீடிக்கிறது. இதனால் மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களையும், விஜயகாந்த் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி