சமீபத்தில் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அடிக்கடி வித்யாபாலன் வருவதாகவும், அவருடன் கணவர் சித்தார்த் ராயும் உடன் வருவதாகவும் தெரிகிறது. கணவர் வரமுடியாத சமயங்களில் வித்யாபாலன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உடன் வருகிறார்கள் என்றும் மும்பை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை வித்யாபாலன் மறுக்கவில்லை.
எனவே வித்யாபாலன் தனது முதல் குழந்தையை சுமக்கத் தொடங்கிவிட்டார் என்றே பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.வித்யாபாலன் கர்ப்பமாக இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவரை வைத்து படமெடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் இந்த செய்தியால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி