சென்ற ஆண்டு காதலர் தின விற்பனையை ஒப்பிடும்போது இந்த வாரத்தில் பரிசுப் பொருள்கள் விற்பனை 25 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2013 காதலர் தின கொண்டாட்டங்களின்போது இளங்காதல் ஜோடிகளால் ரூ.15,000 கோடிக்கு பரிசுப் பொருள்கள் வாங்கப்பட்டன.
அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வில் 500 நிறுவனங்களும், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களும் உட்படுத்தப்பட்டனர். இந்த காதலர் தின சீசனில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி. உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் அதிக சம்பளம் வாங்கும் இளைஞர்களையும், இளம்பெண்களையும் குறி வைத்து பல நிறுவனங்கள் பரிசுப் பொருள்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி